2022-23 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் தேர்தல் நன்கொடைகளில் 70 சதவீத்த்தை பா.ஜ.க. பெற்றுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.250 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சி மொத்த நன்கொடைகளில் 25 சதவீத்த்தை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2022-2023 ஆம் ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. 39 கார்ப்பொரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தேர்தல் நன்கொடையாக ரூ.363 கோடி வழங்கியுள்ளன.
சமாஜ் தேர்தல் டிரஸ்டுக்கு ஒரு நிறுவனம் ரூ.2 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது. இரண்டு நிறுவனங்கள் ரூ.75.50 லட்சத்தை பரிவர்த்தன் தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன. மேலும் 2 நிறுவனங்கள் ரூ.50 லட்சத்தை டிரயம்ப் தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி பா.ஜ.க. ரூ.259.08 கோடியை அல்லது மொத்த தேர்தல் நன்கொடையில் 70.69 சதவீத்த்தை பெற்றுள்ளது.
பி.ஆர்.எஸ். கட்சி ரூ.90 கோடியை அதாவது தேர்தல் நன்கொடையில் 24.56 சதவீத்த்தை பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மொத்தமாக ரூ.17.40 கோடியை கூட்டாக பெற்றுள்ளன.
புரூடன்ட் தேர்தல் அறக்கட்டளை பா.ஜ.க.வுக்கு ரூ.256.25 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. 2021-22 இல் ரூ.336.50 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. சமாஜ் தேர்தல் அறக்கட்டளை ரூ.1.50 கோடியை பா.ஜ.க.வுக்கு வழங்கியுள்ளது.
சமாஜ் தேர்தல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 லட்சத்தை தேர்தல் நன்கொடையாக வழங்கியுள்ளது. புரூடன்ட் தேர்தல் அறக்கட்டளை பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர் காங்கிகிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய நான்கு கட்சிகளுக்கும் தேர்தல் நன்கொடை வழங்கியுள்ளது.