Skip to main content
Date

ங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கும் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி கடந்த நிதி ஆண்டில் ( 2018-19) அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. அதன் முழு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தமாக தேசிய அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டில் 951.66 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.
இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் 742.15 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

மற்ற கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை வருமாறு:
காங்கிரஸ்: ரூ. 148.58 கோடி
திரினாமூல் காங்கிரஸ்: ரூ.44.26 கோடி
தேசிய வாத காங்கிரஸ்:ரூ. 12.05 கோடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:ரூ.3.03 கோடி
இந்திய கம்யூனிஸ்ட்:ரூ.1.59 கோடி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் உண்டு. ஆனால் அந்த கட்சி, கடந்த நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் யாரிடம் இருந்து காசு வாங்கவில்லை என தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது.

இந்த கட்சிகளுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தான் அதிக நன்கொடை வந்துள்ளது. அந்த மாநில கார்ப்பரேட்டுகள் உள்ளிட்டோர் தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக 548 கோடி ரூபாய் வழங்கி, தங்கள் தாராள குணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகமாக பணம் கொடுத்த கார்ப்பரேட் நிறுவனம் எது தெரியுமா?

டாடா குழும கட்டுப்பாட்டில் உள்ள ’’முன்னேற்ற தேர்தல் அறக்கட்டளை’’ தான். அந்த அறக்கட்டளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடந்த ஆண்டு அளித்துள்ள நன்கொடை 455 கோடியே 15 லட்சம் ரூபாய்.