Source: 
Tamil News18
https://tamil.news18.com/news/national/criminal-cases-against-10-candidates-in-mcd-poll-fray-adr-report-845343.html
Author: 
Date: 
27.11.2022
City: 
New Delhi

2017 ஆம் ஆண்டு பிரச்சாரத்துடன் ஒப்பிடுகையில், மொத்த வேட்பாளர்களில் 7% அதிக வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இருப்பினும், 2017-ஐ விட வேட்பாளர் எண்ணிக்கை ஆண்டு சற்று குறைவாக உள்ளது.

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்று “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்” (ADR). 2022 டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிக்கையை இச்சங்கம் சனிக்கிழமை வெளியிட்டது.

இந்த ஆண்டு டெல்லியில் கவுன்சிலர் ஆக போட்டியிடும் 139 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அறிக்கை காட்டுகிறது. அவர்களில் 76 பேர் கடுமையான கிரிமினல் குற்றங்களைச் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு, 1,394 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.அவர்களில், 1,336 வாக்குமூலங்களை ADR ஆய்வு செய்தது. சரியான ஆவணங்களை சமர்பிக்காததால் 13 பேரின் பின்னணியை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை என்று சங்கம் தெரிவித்துள்ளது.

ADR குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் "கடுமையான குற்றங்கள்" கணக்கில் எடுக்கப்பட்டது. அவற்றிற்கு, அத்துடன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஜாமீனில் வெளிவர முடியாத அல்லது கொடூரமான குற்றங்கள், கொலை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

இந்த ஆண்டு பாஜக 250, காங்கிரஸ் 247, ஆம் ஆத்மி 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், பாரதிய ஜனதா கட்சியின் (BJP)11% - 27 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ஆம் ஆத்மி கட்சி (AAP) வேட்பாளர்களில் 18% - 45 வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10% - 25 வேட்பாளர்கள் மீதும் குற்றங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பிரச்சாரத்துடன் ஒப்பிடுகையில், மொத்த வேட்பாளர்களில் 7% அதிக வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இருப்பினும், 2017-ஐ விட வேட்பாளர் எண்ணிக்கை ஆண்டு சற்று குறைவாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு டெல்லியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான போட்டியில் 2,537 வேட்பாளர்கள் இருந்தனர்.அதில் 173 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்து.

வழக்குகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் எந்தச் சட்டமும் இல்லை. இருப்பினும், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method