Skip to main content
Source
Tamil.Oneindia.com
https://tamil.oneindia.com/news/delhi/adr-reports-that-political-parties-have-received-rs-3-429-56-crore-by-issuing-electoral-bonds-in-201-431200.html
Author
Rayar A
Date

டெல்லி: 2019-20-ம் ஆண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்களை அளித்து ரூ.3,429.56 கோடியை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளதாக ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) கூறியுள்ளதாவது:-

2019-20-ல் தேர்தல் பத்திரங்களை அளித்து 3,429.56 கோடியை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் 87.29% தொகையை பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மட்டும் பெற்றுள்ளன .

மேற்கண்ட ஆண்டில் பாஜக தனது ஒட்டுமொத்த வருமானமாக ரூ.3,623.28 கோடி என்று அறிவித்துள்ளது. ஆனால், அதில் 45.57 சதவீதம் அதாவது ரூ.1,651 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது.

காங்கிரஸின் மொத்த வருமானம் ரூ.682.21 கோடியாக இருந்தது. அந்த கட்சி ரூ.8 998.158 கோடியை செலவழித்தது, இது அந்த வருடத்திற்கான வருமானத்தை விட 46.31%அதிகமாகக் கொண்டுள்ளது.2019-20 நிதியாண்டில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்த வருமானம் ரூ.43.676 கோடியாக இருந்தது. ரூ.107.277 கோடி (74.67%) செலவழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், என்சிபி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ ஆகிய 7 தேசியக் கட்சிகள் தங்களின் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.4,758.206 கோடி எனத் தெரிவித்துள்ளன.

நன்கொடை அல்லது பங்களிப்புகளிலிருந்து அதிகபட்ச வருமானம் பெற்ற தேசிய கட்சிகளில் பாஜக (ரூ.3,427.775 கோடி), காங்கிரஸ் (ரூ.9 469.386 கோடி), ஏஐடிசி (ரூ.108.548 கோடி), சிபிஎம் (ரூ. 93.017 கோடி) மற்றும் சிபிஐ (3.024 கோடி) ஆகியவை அடங்கும் என்று அறிவிக்கப்படுள்ளது. ஆனால், 2019-20ஆம் ஆண்டில் ரூ.3,441.32 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கியதாக மாநில மற்றும் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

2018-19 மற்றும் 2019-20 க்கு இடையில், பாஜகவின் வருமானம் ரூ.2,410.08 கோடியிலிருந்து .ரூ.3,623.28 கோடியாக 50.34% (ரூ.1,213.20 கோடி) அதிகரித்துள்ளது. காங்கிரசின் வருமானம் 25.69% (ரூ.235.82 கோடி) குறைந்து 2018-19-ல் ரூ.918.03 கோடியிலிருந்து 2019-20 இல் ரூ.682.21 கோடியாக குறைந்தது.