Skip to main content
Date

புதுடில்லி: இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் ரூ. 635 கோடி சொத்து மதிப்புள்ள சமாஜ்வாதி கட்சி பணக்கார கட்சி எனவும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்துள்ள தேசிய , மற்றும் மாநில கட்சிகள் தங்களது சொத்து கணக்கு, வரவு செலவு, உள்ளிட்ட கணக்கு வழக்குகளை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.
இந்நிலையில் டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜனநாயகத்திற்கான சீர்த்திருத்த அமைப்பு மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு உள்ளிட்டவிவரங்களை சமர்ப்பித்துள்ளது.இது குறித்து நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது:

நாடு முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் கடந்த 2011-12 மற்றும் 2015-16 ஆகிய நிதி ஆண்டில் தங்களது சொத்து விவரங்கள், வங்கி முதலீடுகள், இதர வருமான ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் வாயிலாக கிடைத்தவைகளை தேர்தல் ஆணையத்திடமும், வருமான வரி்த்துறையிடமும் சமர்பித்துள்ளன. அதில் உபி.யின் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.212.86 கோடியாக இருந்தது. 2015-16-ம் நிதியாண்டில் ரூ.635 கோடி என 198 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரண்டாவது கட்சியாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. கட்சி 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 88.21 கோடியாக இருந்த சொத்து மதிப்பு 155 சதவீதம் உயர்ந்து 2015-16-ம் நிதியாண்டில் ரூ. 224.87 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.