Skip to main content
Source
Good Returns Tamil
Date

இந்தியாவில் இருக்கும் முன்னணி 5 தேசிய கட்சிகளுக்கும் கார்ப்ரேட் மற்றும் வர்த்தக அமைப்புகள் 2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 921.95 கோடி ரூபாய் அளவிலான நன்கொடை அளிக்கப்பட்டு உள்ளதாக ADR அமைப்பு தனது ஆய்வில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த 921.95 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையில் 91 சதவீத பணத்தை யார் கொடுத்தார்கள் என்பதற்கான விபரம் உள்ளது. மீதமுள்ள 9 சதவீத தொகைக்கான நன்கொடையாளர்களின் விபரம் இல்லை.

5 முன்னணி தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை அளவு 2004-12 முதல் 2019-20 ஆண்டுக் காலத்தில் சுமார் 143 சதவீதம் அதிகரித்துள்ளது

5 முன்னணி தேசிய கட்சிகளில் பிஜேபி 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 2025 கார்பரேட் மற்றும் வர்த்தக அமைப்புகளிடம் இருந்து மட்டும் சுமார் 720.407 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையைப் பெற்று இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சியாக விளங்குகிறது.

இந்திய காங்கிரஸ் கட்சி

பிஜேபி-ஐ தொடர்ந்து இந்திய காங்கிரஸ் கட்சி 154 நிறுவனங்களின் வாயிலாகச் சுமார் 133.04 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 57.086 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையும் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2019-20ஆம் நிதியாண்டில் எவ்விதமான நன்கொடையும் பெறவில்லை என அறிவித்துள்ளது.

ப்ருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்

2019-20ஆம் நிதியாண்டில் பிஜேபி மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் ப்ருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் நிறுவனம் தான் அதிகப்படியான நன்கொடை அளித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இரு கட்சிகளும் தலா 38 முறை நன்கொடை பெற்றுள்ளது.

நன்கொடை

இதில் பிஜேபி ப்ருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் வாயிலாக 216.75 கோடி ரூபாயும், காங்கிரஸ் 31.00 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பி.ஜி ஷ்ரைக் நிறுவனம் தான் அதிகப்படியான தொகையான 25 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையை அளித்துள்ளது.

ஐடிசி மற்றும் ஜனகல்யாண் எலக்டோரல் டிரஸ்ட்

பிஜேபி மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் ப்ருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் நிறுவனத்தைத் தாண்டி அதிக நன்கொடை அளித்த நிறுவனங்களாக ஐடிசி மற்றும் ஜனகல்யாண் எலக்டோரல் டிரஸ்ட் விளங்குகிறது.


abc