Source: 
Author: 
Date: 
15.04.2019
City: 

காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இருப்பதிலேயே பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார். 417 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் 802 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (Association For Democratic Reforms ADR) ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.


அதன்படி, 67 வேட்பாளர்கள் கடும் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். ஈரோட்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் 14 வழக்குகளுடன் முதலிடமும், தர்மபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 வழக்குகளுடன் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

184 கோடீஸ்வர வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அதில், 23 பேர் திமுக சார்பிலும், 22 பேர் அதிமுக சார்பிலும், 19 பேர் மக்கள் நீதி மய்யம் சார்பிலும், 12 பேர் நாம் தமிழர் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். 7 பேர் காங்கிரசில் இருந்தும், பாஜகவில் இருந்து 5 பேரும், பாமகவில் இருந்து 4 பேரும் கோடீஸ்வரர்களாக போட்டியிடுகின்றனர்.

527 சுயேட்சைகளில் 76 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இருப்பதிலேயே பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார். 417 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 237 கோடிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஏசி சண்முகம் 126 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மொத்தமுள்ள வேட்பாளர்களில் 80 சதவிகிதம் பேர் பட்டதாரிகள், 8 சதவிகிதம் பேர் பெண்கள், 38 சதவிகிதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method