அங்கீகரிக்கப்பட்ட 18 தேர்தல் அறக்கட்டளைகளில் (electoral trusts), ஐந்து மட்டுமே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பங்களிப்புகளைப் பெறுவதாக அறிவித்துள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற மொத்த நன்கொடைகளில் பாஜக மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ரூ.259.08 கோடி அல்லது 70.69% பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ரூ.90 கோடி அல்லது 24.56% பெற்றது என்று தேர்தல் சீர்திருத்தத்தில் செயல்படும் என்ஜிஓவான ADR தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்பது தான் சுருக்கமாக ADR என்று குறிப்பிடப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட 18 தேர்தல் அறக்கட்டளைகளில் (electoral trusts), ஐந்து மட்டுமே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பங்களிப்புகளைப் பெறுவதாக அறிவித்துள்ளன.
தேர்தல் அறக்கட்டளைகள் 2013 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தைப் போலவே, அவை அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் நன்கொடைகள் வழங்கப்படுவதை எளிதாக்கும். ஆனால், தேர்தல் பத்திரங்கள் திட்டம் நன்கொடையாளருக்கு பெயர் தெரியாததை உறுதிப்படுத்த முயற்சி செய்கிறது, தேர்தல் அறக்கட்டளைகள் ஒவ்வோர் ஆண்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்புகள் மற்றும் கட்சிகளுக்கு நன்கொடைகள் பற்றிய அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் (Election Commission ) சமர்ப்பிக்க வேண்டும்.
2022-23 ஆம் ஆண்டில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் (CBDT) பதிவு செய்யப்பட்ட 18 தேர்தல் அறக்கட்டளைகளில் 13 அறக்கட்டளைகள், தேர்தல் ஆணையத்திடம் தங்கள் பங்களிப்பு விவரங்களைச் சமர்ப்பித்தன. அவற்றில் ஐந்து அறக்கட்டளைகள், கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பங்களிப்புகளைப் பெற்றன என்று ADR தெரிவித்துள்ளது.
34 கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்கள் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டுக்கு ரூ.360 கோடிக்கு மேல் நன்கொடை அளித்த நிலையில், ஒரு நிறுவனம் சமாஜ் எலெக்டோரல் டிரஸ்டுக்கு ரூ.2 கோடியும், Paribartan எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நிறுவனங்கள் ரூ.75.50 லட்சமும், Triumph எலெக்டோரல் டிரஸ்டுக்கு இரண்டு நிறுவனங்கள் ரூ.50 லட்சமும் அளித்தன.
2022-23ல் தேர்தல் அறக்கட்டளைக்கு மொத்தம் 11 நபர்கள் பங்களித்துள்ளனர். ப்ரூடென்ட் எலெக்டோரல் அறக்கட்டளைக்கு எட்டு நபர்கள் ரூ.2.70 கோடியும், Einzigartig தேர்தல் அறக்கட்டளைக்கு மூன்று நபர்கள் ரூ.8 லட்சமும் அளித்துள்ளனர்.
BRS நான்கில் ஒரு பங்கு நிதியைப் பெற்றிருக்கிறது
இந்த அறக்கட்டளைகள் பெற்ற மொத்த தொகையான ரூ.366 கோடியில், பாஜக ரூ.259.08 கோடி அல்லது அனைத்து அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் 70.69% பெற்றிருக்கிறது.
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ரூ.90 கோடி அல்லது 24.56 சதவீதம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் ரூ.17.40 கோடி கிடைத்தது.
அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, தேர்தல் அறக்கட்டளைகள் நிதியாண்டில் பெறப்பட்ட மொத்த பங்களிப்புகளில் குறைந்தது 95% ஐ முந்தைய நிதியாண்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உபரியுடன் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் தகுதியான அரசியல் கட்சிகளுக்கு விநியோகிக்க வேண்டும். 2022-23 ஆம் ஆண்டில், அறக்கட்டளைகள் 99.99% தொகையை அரசியல் கட்சிகளுக்கு விநியோகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மற்றும் ArcelorMittal நிப்பான் ஸ்டீல் ஆகியவை இந்த தேர்தல் அறக்கட்டளைகளுக்கு அதிக நிதியளித்த முதல் மூன்று கார்ப்பரேட் நன்கொடையாளர்களாக இருக்கின்றன.
மாநிலம் வாரியாக விவரம்
தெலங்கானாவில் இருந்து கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்கள் ரூ.145.51 கோடியும், மகாராஷ்டிராவில் இருந்து ரூ.105.25 கோடியும், குஜராத்தில் இருந்து ரூ.50.20 கோடியும், மேற்கு வங்கத்தில் இருந்து ரூ.30.08 கோடியும், ஹரியானாவில் இருந்து ரூ.10 கோடியும், தமிழ்நாட்டிலிருந்து ரூ.7 கோடியும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து ரூ.6.5 கோடியும் வழங்கியுள்ளனர். ஆந்திரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து தலா ரூ.3 கோடியும், ராஜஸ்தானில் இருந்து ரூ.2 கோடியும் தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நிதியளித்துள்ளன.