புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 40 மாநில கட்சிகள் 2023 -24ம் நிதியாண்டில் ரூ.2,532.09 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. இவற்றில் 70 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் வருமானம் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி,
அதில், இந்த நிதியாண்டில் 40 மாநில கட்சிகள் சேர்ந்து ரூ.2,532.096 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. அதில் 70 சதவீதம்( ரூ.1,796.024) கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளன.
அதிக வருமானம் ஈட்டிய கட்சிகள்
பிஆர்எஸ்( பா ரதிய ரா ஷ்ட்ரிய சமிதி) - ரூ.685.51 கோ டியும்( முந்தைய ஆண்டை விட ரூ.52 கோ டி குறை வு)
திரிணமுல் கா ங்கிரஸ்- ரூ.646.39 கோ டியும்( முந்தைய ஆண்டை விட ரூ.312 கோ டி அதிகம்)
பிஜூ ஜனதா தளம் - ரூ.297.81 கோ டியும்( முந்தைய ஆண்டை விட ரூ.116 கோ டி அதிகம்)
தெ லுங்கு தே சம் - ரூ.285.07 கோ டியும்( முந்தைய ஆண்டை விட ரூ.221 கோ டி அதிகம்)
ஓய்எஸ்ஆர் கா ங்கிரஸ் - ரூ.191.04 (முந்தைய ஆண்டை விட ரூ.116 கோ டி அதிகம்)
திமுக - ரூ.180.94 கோ டி( முந்தைய ஆண்டை விட ரூ.33 கோ டி குறை வு)
அதிமுக - ரூ.46.98 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. ( முந்தைய ஆண்டை விட ரூ.26 கோடி அதிகம்)
இவ்வா று வருமா னம் பெ ற்ற 27 மா நில கட்சிகள், தங்களின் வருமா னத்தை செ லவு செ ய்யவில்லை . 12 கட்சிகள்
வருமா னத்தை விட செ லவு அதிகரித்துள்ளது.
தங்களுக்கு கிடைத்த வருமா னத்தில்
பிஆர்எஸ் - ரூ.430.60 கோ டி
திரிணமுல் - ரூ.414.92
பிஜூ ஜனதா தளம் - ரூ.253.79 கோ டியை செ லவு செ ய்யா மல் வை த்துள்ளன.
இதற்கு மா றா க ஓய்எஸ்ஆர் கா ங்கிரஸ், திமுக, சமா ஜ்வா தி, ஐக்கிய ஜனதா தளம்,ஓய்எஸ்ஆர் கா ங் ஆகிய கட்சிகள்
வருமா னத்தை விட அதிக செ லவு செ ய்துள்ளன.
பிஆர்எஸ், திரிணமுல் கா ங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் கா ங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 10 கட்சிகள்
தே ர்தல் பத்திரம் மூலம் ரூ.1,796.02 கோ டி ( 70.93 சதவீதம்) வருமா னம் ஈட்டியுள்ளன.
மாநில கட்சிகள், கடந்த 2022 -23 நிதியாண்டில் இந்த கட்சிகள் சேர்ந்து ரூ.1,736.85 கோடி மொத்த வருவாய் பெற்றன. அடுத்தாண்டு வருமானம் 45.77 சதவீதம் அதிகரித்துள்ளது மேற்கண்ட விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

