Skip to main content
Source
Tamilwire
Date

2024-25 நிதியாண்டில், பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கர் ளிடம் இருந்து தேர்தர் ல்
அறக்கட்டட் ளை நிறுவனங்கள் 3 ஆயிரத்துத் 826 கோடி ரூபாய் நிதி பெற்றன.

2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral Trusts) மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை மொத்தம் ரூ.3,826 கோடியாக உள்ளது. இதில் பெரும்பகுதியான 82 சதவீதம் அதாவது ரூ.3,157.65 கோடியை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பெற்றுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms - ADR) தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADR அறிக்கையின்படி, 10 தேர்தல் அறக்கட்டளைகள் இந்த நிதியாண்டில் ரூ.3,826.34 கோடி நன்கொடைகளைப் பெற்று, அதே அளவு (ரூ.3,826.35 கோடி) கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. அறக்கட்டளைகள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 95% நிதியை வழங்க வேண்டும் என்ற விதியின்படி இது நடந்துள்ளது.

பாஜகவுக்கு அடுத்தபடியாக இந்திய தேசிய காங்கிரஸ் ரூ.298.78 கோடி (7.81%) பெற்றுள்ளது. ஆல் இந்தியா திரிணமூல் காங்கிரஸ் ரூ.102 கோடி (2.67%) பெற்றுள்ளது. மீதமுள்ள ரூ.267.92 கோடி 19 கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.


abc