Skip to main content
Source
Zee News
Author
Yuvashree
Date

Wealthiest Indian Chief Ministers List : இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் யார் யார் தெரியுமா? இதில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த இடம் என்பதையும் அவரிடம் இருக்கும் சொத்து என்ன என்பதையும் இங்கு பார்ப்போம்.

Wealthiest Indian Chief Ministers List : உலகின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில், டாப் இடத்தில் இருப்பது யார்? மிகவும் ஏழ்மையான முதலமைச்சர் யார்? போன்ற விவரங்களை இங்கு பார்ப்போம். இதில் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் இடம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

இந்தியாவின் முதல்வர்கள்

இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழ்மையான முதல்வர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. நாட்டில் மொத்தம் 31 முதலமைச்சர்கள் இருக்கின்றனர். இதில், அதிகம் பணம் படைத்த முதல்வர் யார் தெரியுமா?

Chandrababu Naidu

இந்தியாவின் பணக்கார முதல்வராக இருப்பவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடியாக இருக்கிறது. ரூ.810 கோடிக்கு அசையும் சொத்துகளையும், 121 கோடிக்கும் அதிகமாக அசையா சொத்துகளையும் வைத்திருக்கிறார்.

பிரேமா காண்டு

பணக்கார முதல்வர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருப்பவர், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பிரேமா கண்டு. இவரது சொத்து மதிப்பு, ரூ.332 கோடிக்கும் மேல் உள்ளதாம். இவருக்கு அடுத்த இடத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இருக்கிறார்.

ஓமர் அப்துல்லா

இந்தியாவின் ஏழை முதல்வர்கள் லிஸ்டில் இருப்பவர், ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லா. 

மமதா பானர்ஜீ

ஓமர் அப்துல்லாவிற்கு கீழ், கடைசியாக ஏழை முதல்வராக இருப்பவர் மமதா பானர்ஜீ. மேற்கு வங்காளத்தின் முதல்வரான இவரது சொத்து மதிப்பு, ரூ.15 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொத்துமதிப்பு குறித்து தெரிந்து கொள்ளவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர், இந்தியாவின் பணக்கார முதல்வர்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கிறார். 

சொத்து விவரங்கள்

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பானது ரூ.8.88 கோடி என்று சொல்லப்படுகிறது. இவருக்கு கீழ் கேரள முதல்வர் பிரணாயி விஜய்யன் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.ரூ.1.18 கோடியாக இருக்கிறது.


abc